இடி, மின்னலுடன் பெய்த கனமழை... குளு குளு குளிர்ச்சியில் தமிழக மக்கள்

x

தஞ்சாவூரில், பள்ளிஅக்ரஹாரம், டவுன்கரம்பை, சூரக்கோட்டை, நாஞ்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஓட்டுநர்கள் அவதி அடைந்தனர்.

திருவண்ணாமலை, அதன் சுற்றுப்புறங்களான வேங்கிக்கால், அடி அண்ணாமலை, மல்லவாடி, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், வேட்டப்பட்டு, பந்தாரப்பள்ளி, பச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், இரவு நேரத்தில் பெய்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்