இடி,மின்னலுடன் விடிய விடிய கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் | Chennai Rain
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மெரினா கடற்கரை, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது. சில இடங்களில் பலத்த காற்று காரணமாக, சாலை பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் விழுந்தன.கனமழையால் ஜி.பி ரோடு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Next Story