குமரியை மிரட்டும் கனமழை - தயார் நிலையில் தீயணைப்பு துறை
கன்னியாகுமரியில் தொடரும் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட தீயணைப்புத் துறை தயார் நிலையில் உள்ளது. நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு சென்ற மாவட்ட அதிகாரி சத்யகுமார், மீட்பு உபகரணங்களை பார்வையிட்டார். மரம் அறுக்கும் எந்திரம், படகு, மிதவைகள், மோட்டார்கள், ஆபத்து கால உயர் மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பார்வையிட்டார்.
நாகர்கோவில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது
Next Story