வெளுக்க ரெடியான கனமழை..அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு | Rain
வடகிழக்கு பருவமழை காரணமாக, 24 மணி நேரமும் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்றது. அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆய்வு மேற்கொண்டார். மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைந்து 24 மணி நேரமும் பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மொத்தமுள்ள 176 கோட்டங்களிலும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு குழுக்கம் அமைத்து, ஒவ்வொரு குழுவிலும் 15 பணியாளர்கள் வீதம், 5 ஆயிரம் பேர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மரம் வெட்டும் உபகரணங்கள், மின் தளவாடப் பொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் யும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.