#JUSTIN | 5 மணி நேரமாக அடித்த கனமழை - வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை

x

செய்தி;நாகையில் 5,மணி நேரத்திற்கும் மேலாக அடித்து நொறுக்கிய பேய் மழை; வெள்ளநீரில் மிதந்து வந்த வாகனங்கள்; மழை நீரை அகற்ற நகராட்சி ஊழியர்களுடன் களத்தில் இறங்கிய சேர்மன்;

நாகை மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் 5 மணி நேரத்திற்கு மேலாக கனமழை அடித்து நொறுக்கி வருகிறது. குறிப்பாக நாகை புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம்,பப்ளிக் ஆபீஸ் சாலை, வ உ சி சாலை, அரிய பத்திர பிள்ளை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் அங்கு மழை நீர் குளம்போல் தேங்கியது. அவ்வழியே சென்ற பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் மழை வெள்ள நீரில் மிதந்தவாறு சென்றன. இதனிடையே பப்ளிக் ஆபீஸ் சாலை, வ உ சி சாலை, அரிய பத்திர பிள்ளை சாலையில் மழைநீர் மூன்று பக்கமும் குளம்போல் தேங்கியதை அறிந்து, நகராட்சி ஊழியர்களுடன் சம்ப இடத்திற்கு விரைந்து வந்த நகர மன்ற தலைவர் மாரிமுத்து, அங்கு சாக்கடைகளில் ஏற்பட்ட அடைப்பை சீராக்கும் பணியை தொடங்கினார்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால், நாகையில் பள்ளி மற்றும் வேலைக்கு சென்றோர் பள்ளம் மேடு தெரியாமல் இன்று பெரும் சிரமத்தை சந்தித்தனர். இதைப்போல் நாகை பேருந்து நிலையத்திலும் மழைநீர் தேங்கி நின்றதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் தேங்கிய மழை நீரில் தட்டு தடுமாறிவாறு நடந்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்