அடித்து வெளுக்கும் கனமழை... வெள்ள அபாய எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக, பரளியாறு, தாமிரபரணி ஆற்று பகுதிகளில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் முழு கொள்ளளவு 77 அடியாக உள்ள நிலையில், 75 அடிக்கு மேல் வரும் உபரிநீர் பரளியாற்றில் திறந்து விடப்படும். இந்நிலையில், கனமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் தற்போது, 71 அடியை எட்டியுள்ளது. இதனால், பரளியாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Next Story