#JUSTIN | விடிய விடிய அடித்த கனமழை.. மூழ்கிய முக்கிய பாலம் - நீரில் கலந்த `தங்கம்'

x

ஈரோட்டில் விடிய விடிய பெய்த கனமழையால், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு செய்து வருகிறார்

ஈரோட்டில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழைவெள்ளம் காரணமாக அன்னை சத்யா நகர் மல்லிகை நகர் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.இதையடுத்து மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வரும் நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி சம்பவ இடத்தில் ஆய்வு

ஈரோட்டில் விடிய விடிய பெய்த கனமழையால் அன்னை சத்யா நகர் பகுதியில் சங்கர் என்பவரது வீடு இடிந்து வீட்டில் இருந்த அரை பவுன் தங்கம் மற்றும் 11ஆயிரம் ரொக்கம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது.மேலும் ஓடை குறுக்கே உள்ள பாலம் மூழ்கி அருகில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்பில் மழைநீர் புகுந்தது.இதையடுத்து மழைநீர் வடிகால் செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு ஈடுபட்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்