அடுத்த 3 நாட்களுக்கு எகிறி அடிக்கும் வெயில்... வானிலை மையம் கொடுத்த வார்னிங்
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் 11-ம் தேதி
வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை என்றும், அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளது.
இன்று அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3 முதல் 5 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 முதல் 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.