சத்தமின்றி உயர்ந்து வரும் விலை..வெயிலால் வந்த அடுத்த தலைவலி - உங்க பர்ஸ் பத்திரம்
சென்னையில் பழங்களின் விலை கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு சில பழங்களின் உற்பத்தி, தேவைக்கு ஏற்ப இல்லாததால் அவற்றின் விலை, தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக மாம்பழத்தின் உற்பத்தி கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதால், அதன் விலை கிலோவிற்கு ரூபாய் 20 முதல் 30 வரை அதிகரித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பழங்களின் விலை பல்வேறு காரணங்களால், கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து, சென்னை பழவியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தெரிவிப்பதை கேட்கலாம்.
Next Story