காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று... வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
  • கர்நாடகவில், கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைப்பு... பல்வேறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு...
  • கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த முதல்வர் சித்தராமையாவின் பதிவுகளால் அதிர்ச்சி... ஒரே நாளில், மீண்டும் மீண்டும் திருத்தப்பட்ட பதிவுகளால் குழப்பம்...
  • தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்... ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், நிர்வாக ரீதியாக அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு...
  • மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்... தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு...
  • மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சென்னையில் பா.ம.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்... கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு...
  • மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சி, உதய் மின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது தான் காரணம்... தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு...
  • சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் துப்பாக்கி முனையில் ரவுடி சேது என்கிற சேதுபதி கைது... அதி தீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி...
  • ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரம்... ஒருவர் பலி... 8 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த ஒருவர் உள்பட 10 பணியாளர்கள் பத்திரமாக மீட்பு...
  • பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் பங்கேற்பு... இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்