காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தில் ஒரே நாளில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு...
  • தமிழக உள்துறை செயலாளர் அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றம்..... புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம்...
  • பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு சீரமைப்பு... குமாரசாமி, ராம்மோகன் நாயுடு, சிராக் பாஸ்வான் என பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட 15 மத்திய அமைச்சர்கள், குழுவில் சேர்ப்பு...
  • தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 23ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்... அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு...
  • கரூரில் போலி சான்றிதழ் வழங்கி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்த வழக்கு... அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கேரளாவில் கைது செய்தது சிபிசிஐடி... கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை...
  • தென்காசியில் இருந்து இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை துவக்குகிறார், சசிகலா... நள்ளிரவில் தென்காசி சென்ற சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு...
  • சென்னையில் ஜாபர் சாதிக்கின் பினாமி ஜோசப் வீட்டில் 15 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை... ஜோசப் மனைவி ஆயிஷாவிடம் 158 பக்க ஆவணங்களில் கையெழுத்தை பெற்று, விசாரணைக்காக ஜோசப்பை அழைத்துச் சென்ற அதிகாரிகள்... சொத்து பத்திரம், வங்கி புத்தகம், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல்...
  • சாட்டை துரைமுருகனின் செல்போனில் இருந்த ஆடியோக்கள், திருச்சி சூர்யா சிவாவுக்கு கிடைத்தது எப்படி என நாம் தமிழர் கட்சி கேள்வி... சைபர் கிரைம் போலீசார், சட்ட விரோதமாக எடுத்துக் கொடுத்ததாக டிஜிபி அலுவலகத்தில் புகார்...
  • தாய்லாந்தில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் வெளிநாட்டவர் ஆறு பேர் சடலங்களாக மீட்பு... சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், விசாரணையை துரிதப்படுத்த தாய்லாந்து பிரதமர் உத்தரவு...
  • டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 15வது லீக் போட்டியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ்... எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி...

Next Story

மேலும் செய்திகள்