இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (11-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய். சந்திரசூட் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை... பிரதமர் மோடி பங்கேற்று ஆரத்தி காண்பித்து வழிபாடு...


ஜம்மு கஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்...சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் 5 கேரண்டிகளை வெளியிட்டது காங்கிரஸ்...


திமுகவை மிரட்ட, திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்... திருமாவளவனுக்கு ஏதாவது கோரிக்கை இருக்கலாம் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சனம்...


மது ஒழிப்பு மாநாட்டிற்கு காங்கிரஸுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் பங்கேற்பது குறித்து தலைமையிடம் பேசி முடிவெடுப்போம்... காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு...


திருமாவளவன், யாருடன் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்... நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...


கோவை கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினருடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை.... வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி விதிப்பால், பில் அடிக்கும்போது கம்ப்யூட்டரே திணறுவதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன் தெரிவித்த கருத்தால் சிரிப்பலை............


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் சலசலப்பு... இளைஞர்கள் சிலர் நினைவிடத்தின் மீது ஏறி அஞ்சலி செலுத்த முயன்றதால் தள்ளுமுள்ளு.. போலீஸ் தடியடியால் பரபரப்பு...


கர்நாடக மாநிலம் கலபுர்கியில் ஓலா ஸ்கூட்டர் ஷோரூமுக்கு தீ வைத்த வாடிக்கையாளரால் பரபரப்பு... ஸ்கூட்டர் வாங்கிய 2, 3 நாட்களிலேயே பிரச்சினை வந்ததால் அதிருப்தி...


Next Story

மேலும் செய்திகள்