காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரத்தில், சூறைக்காற்றுடன் கனமழை... புரசைவாக்கம், ஜி.பி. ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதி...
  • சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், சென்னைக்கு வந்த 6 விமானங்கள் தரை இறங்க முடியாமல் அரை மணி நேரம் வானிலேயே வட்டமிட்டன...சென்னையில் இருந்து மலேசியா, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட்ட 7 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதம்...
  • புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மாநிலங்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...ஜூலை 1ம் தேதி அமலாகும் நிலையில் நிறுத்தி வைக்கவும் வலியுறுத்தல்...
  • நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை... பொருளாதார அறிஞர்கள் மற்றும் முக்கிய துறையினரை சந்திக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  • வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அளித்த கடிதம் ஏற்பு... சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாக மக்களவை செயலகம் அறிவிப்பு...
  • சென்னையில் இன்று அண்ணாமலை தலைமையில் பாஜக மையக்குழுவின் ஆலோசனை கூட்டம்... மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்...
  • கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழக அரசு முடிவு... வருகிற 25ஆம் தேதிக்குள் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை முடிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அறிவுரை...
  • தமிழகத்திற்குள், தமிழக பதிவு எண் பேருந்துகளை மட்டுமே இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு... பிற மாநில பதிவு எண் பேருந்துகளை நிறுத்துவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு அரசுக்கு கோரிக்கை...
  • உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று முதல் சூப்பர் 8 சுற்று தொடக்கம்... முதல் போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள அமெரிக்கா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்