அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாரா மத்திய அமைச்சர்? - விசாரணைக்கு ஆஜர்

x

2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, பெங்களூர் லோக் ஆயுக்தா அலுவலகத்தில் மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி விசாரணைக்கு ஆஜரானார்.

2015 ஆம் ஆண்டு டி - நோட்டிபிகேஷன் விவகாரத்தில் எச்டி குமாரசாமி மீது ஜெயக்குமார் ஹிரேமட் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப‌ப்பட்டிருந்த‌து. அதன்படி லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜரான குமாரசாமி, அதிகாரிகளின் கேள்விக்கு பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2015 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், தற்போதைய சித்தராமையா தலைமையிலான அரசு தன் மீது வழக்கு பதிவு செய்ததாக குற்றம் சாட்டினார். அப்போதைய, சித்தராமையா தலைமையிலான அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வந்த‌தை பொறுத்துக் கொள்ள முடியாமல், தற்போது இந்த வழக்கை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்