120 மனித உயிர்களை காவு வாங்கிய பெரும் துயரத்தின் மூல காரணம் -நாடே நடுங்கிய கோரத்தில் அதிர்ச்சி தகவல்
120 மனித உயிர்களை காவு வாங்கிய
பெரும் துயரத்தின் மூல காரணம்
நாடே நடுங்கிய கோரத்தில் அதிர்ச்சி தகவல்
உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில், நடைபெற்ற சிவபெருமான் வழிபாடு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேற முயற்சித்து, மண்டபத்தின் சிறிய வாயிலில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது.
தொடர்ந்து கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 120-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏராளமானோர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனையில் திரும்பிய பக்கமெல்லாம் சடலங்களாக இருந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவித்துள்ள போலீசார், சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, விபத்து நடப்பதற்கு முன்பு நடைபெற்ற வழிபாடு நிகழ்ச்சியின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.