1,00,008 வடை மாலையை உடையாக அணிந்த நாமக்கல் ஆஞ்சநேயர்.. பக்தி பரவசத்தில் மக்கள்
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது
அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டபோது, 1 லட்சத்து 8 வடைகள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு, எண்ணெய், தயிர், தேன், நெய், சந்தனம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பின்னர் பட்டாச்சாரியார்கள் ஆஞ்சநேயருக்கு குடம், குடமாக பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
அதையடுத்து, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், நாமக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.