கைப்பட கடிதம், கண்ணீர் மல்க வீடியோ..."இவர்கள் தான் காரணம்.. நா போறேன்" | Chennai
சென்னையை அடுத்த மாங்காட்டில் விசாரணைக்கு அழைத்த போலீசார் தன்னை துன்புறுத்துவதாக கூறி வீடியோ பதிவிட்டு விட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
மாங்காடு அருகே பரணிபுத்தூர், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ரூபன் என்பவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது போரூர் காவல்நிலையத்தில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் விசாரணைக்கு அழைத்து அம்பத்தூர் உதவி ஆய்வாளர் தன்னை அவதூறாக பேசுவதாகவும், மன உலைச்சலை ஏற்படுத்தும் வகையில் பேசுவதாகவும், பழைய வழக்குகளை எடுத்து தன்னை மீண்டும் சிறையில் அடைத்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறி வீடியோ பதிவிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த 2வது மனைவி, ரூபன் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து ரூபனின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையை அடுத்த மாங்காட்டில் விசாரணைக்கு அழைத்த போலீசார் தன்னை துன்புறுத்துவதாக கூறி வீடியோ பதிவிட்டு விட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.