"அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஆபத்து" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
"அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பது ஆபத்து" - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் நிர்வாக நடைமுறையை மேம்படுத்தவும் தனியாரை பள்ளிக்கல்வித்துறையில் அனுமதிப்பது மிகவும் ஆபத்தான செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடாரத்திற்குள் தலையை நுழைத்துக் கொள்ள ஒட்டகத்தை அனுமதிப்பது போன்று, தனியாருக்கு அரசு பள்ளிகளை திறந்து விடக்கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆபத்தான இந்த பாதையில் அரசு பயணிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள அவர், பள்ளிக்கல்வித்துறையில் தனியாரை அனுமதிக்கும் திட்டத்தை அரசு கை விட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story