நாளை தொடங்கும் ஹஜ் புனித யாத்திரை - தமிழக அரசு வெளியிட்ட தகவல்
தமிழக அரசு ஹஜ் புனித யாத்திரைக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வதற்காக பதிவு செய்தனர். இந்நிலையில், நாளை முதல் ஜூன் 9ம் தேதி வரை தமிழக அரசு சார்பாக ஹஜ் புனித யாத்திரைக்கு 4 ஆயிரத்து 600 பயணிகள் செல்லவுள்ளனர். ஒவ்வொரு ஹஜ் பயணிக்கும் தமிழக அரசு சார்பாக தலா 17 ஆயிரத்து 480 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணி முதல் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் தமிழக அரசு சார்பாக வழி அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
Next Story