"பாடலுக்கு இசைமேல் என்ன தான் கோபம்.." "விரைவில் விவாகரத்து..?" பிரியும் ஜி.வி.பி. - சைந்தவி...

x

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி தம்பதி விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாக பரவி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்த ஜிவி பிரகாஷ் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்... மேலும், வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 10ம் ஆண்டு திருமண நாளை ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதி மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றோ அல்லது நாளையோ வெளியிடுவார்கள் என்று கூறப்படுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்