கும்மிடிப்பூண்டியை பரபரப்பாக்கிய சம்பவம் - இத்தனைக்கு பின்னாலும் இருந்தது ஒரு ஊராட்சி தலைவியா?
கும்மிடிப்பூண்டியை பரபரப்பாக்கிய சம்பவம் - இத்தனைக்கு பின்னாலும் இருந்தது ஒரு சாதாரண ஊராட்சி தலைவியா?
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கோவில் திருவிழாவின்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் உள்ள எட்டியம்மன் கோவிலில் கடந்த 9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கோயிலில், சாமி கும்பிடுவதற்கு பட்டியலின சமூகத்தினர் சென்றனர்.ஆனால், தங்கள் பாதையில் பட்டியலின சமூகத்தினர் கோயிலுக்கு செல்லக் கூடாது என மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்வதாக கூறியும், மாற்று சமூகத்தினர் ஏற்காததால், பட்டியலின சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட போலீசார், கோயிலை பூட்டி சீல் வைத்தனர்.இந்த நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை உள்பட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.