``உடைந்த தீண்டாமை சீல்; காட்சி தந்த அம்மன் 3 தலைமுறை போராட்டம்; இனி கூடாது.'' கிடைக்குமா தீர்வு?
திருவள்ளூர் மாவட்டம், வழுதலம்பேடு கிராமத்தில் சீல் வைக்கப்பட்ட எட்டியம்மன் கோயில் திறக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் உள்ளது, எட்டியம்மன் கோயில்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில், 2002ஆம் ஆண்டு பட்டியலின மக்களை வழிபட அனுமதிக்கப்படாததால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது.
ஆனால், கோயிலுக்கு செல்லும் வழி தனி நபருக்கு சொந்தமானது எனக்கூறி, அந்த வழியாக பட்டியலின மக்கள் செல்ல அனுமதி மறுத்ததால் பிரச்சினை ஏற்பட்டதில், மீண்டும் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் கடந்த 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, யாரையும் தடுக்கக்கூடாது என்று இருதரப்பினரிடமும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்து பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், கோயிலில் சீல் பிரிக்கப்பட்டு, பட்டியல் சமூக மக்கள் தரிசனம் செய்தனர்.