நாட்டையே Foolish ஆக்கிய மோரிஸ்... போலி கோர்ட், புருடா ஜட்ஜ் - கலெக்டருக்கே தில்லாக ஆர்டர் - ரூ.200 கோடி அரசு நிலம் அபேஸ்

x

போலி வங்கி, போலி காவல் நிலைய வரிசையில் இப்போது கதிகலங்க வைத்திருப்பது போலி நீதிமன்றம்... குஜராத்தின் அஹ்மதாபாத்தை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் தலைநகர் காந்தி நகரில் வாடகை கட்டடம் ஒன்றில் போலி நீதிமன்றத்தை உருவாக்கி உள்ளார். அசல் நீதிமன்றத்தைப் போலவே போலியாக எழுத்தர்களும் வழக்கறிஞர்களும் கூட நியமிக்கப்பட்டுள்ளனர்.

நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று பொதுவெளியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மோசடி மன்னன் மோரிஸ் நாள் தோறும் காரசாரமான விவாதங்களை நடத்தி தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார்... சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுஜி என்பவர் நில விவகாரம் தொடர்பாக மோரிசின் போலி நாடியுள்ளார்... 200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த அவர், அங்கு 50 ஆண்டுகளாக இருப்பதால் அந்த நிலத்தைத் தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்க.... 30 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக் கொண்ட மோரிஸ், அரசு நிலம் இனி பாபுஜியுடையது என தாராள மனதுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பாணையை பாபுஜி அஹ்மதாபாத் ஆட்சியரிடம் வழங்க...அவரோ நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து பாபுஜி அஹ்மதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோதுதான் மோரிசின் மோசமான ஏமாற்று வேலை அம்பலமாகி அவர் கைது செய்யப்பட்டார். மோசடி செய்து கோடீஸ்வரரான மோரிஸ், அரசு நிலம் மற்றும் பொதுமக்களிடம் இருந்து 100 ஏக்கர் பரப்பிலான நிலங்களை தனது பெயருக்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்