"புலியும், யானையும் வருது; புள்ளகுட்டிய வச்சிட்டு என்ன பண்ண..?"வீடு கிடைத்தும், கிடைக்காத விமோச்சனம்

x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, புதிய தொகுப்பு வீடுகள் கட்டி ஓராண்டு ஆகியும், மின்சாரம் குடிநீர் இணைப்புகளை வழங்காமல் மெத்தனம் காட்டுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.....

இந்த கிராமம், நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சிக்குட்பட்ட தொரப்பள்ளி ஆற்றின் ஓரம் இருக்கும் இருவயல் கிராமம். பழங்குடி மக்கள் வசிக்கும் இங்கு அடிக்கடி மழை வெள்ளம் வரும் நிலையில், அவர்களுக்கு அரசு, நிரந்தமாக குடியிருப்பு கட்டிக்கொடுத்துள்ளது. இருவயலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மொளபள்ளி பகுதியில், தலா 3 லட்சம் மதிப்பில், தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

வீடுகள் கட்டிக் கொடுத்தாலும் அங்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று கூறுகின்றனர் இருவயல் பழங்குடி மக்கள்...

வனவிலங்குகள் அச்சுறுத்தல் அதிகம் இருக்கும் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு ஒரு வருடம் ஆகியும் தொகுப்பு வீட்டிற்கு மின்சாரம் இல்லாததால் அங்கு செல்ல அச்சப்படுவதாக கூறுகிறார்கள் இவர்கள்....

தொரப்பள்ளி ஆற்றில் மழை நேரங்களில் அடிக்கடி வரும் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நிரந்தர குடியிருப்பு கட்டி கொடுத்தாலும், அங்கு வசிக்க அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும் என்பது, இருவயல் பழங்குடி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்