`பார்கே மாணிக்கம் பார்கே..' - குட்டி யானைகளுக்கு கும்கி பயிற்சி.. சொன்னதை அப்படியே செய்து அசத்தல்

x

`பார்கே மாணிக்கம் பார்கே..' - குட்டி யானைகளுக்கு கும்கி பயிற்சி.. சொன்னதை அப்படியே செய்து அசத்தல்'

முதுமலை யானைகள் காப்பகத்தில், ஐந்து யானைகளுக்கு தத்ரூபமாக கும்கி பயிற்சி அளிக்கப்பட்டது. முதுமலையில், பொம்மன், உதயன், விஜய், சீனிவாசன், கிருஷ்ணா போன்ற யானைகள் கும்கி யானைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த யானைகளுக்கு பாகன்கள் கும்கி பயிற்சி அளித்தனர்.

மிகக் குறைந்த வயதான பொம்மி குட்டி யானைக்கு, சொல் பேச்சை கேட்கும் பயிற்சியான காதை பிடித்து கொண்டு அதே இடத்தில் சுற்றுவது, நீட்டமான சங்கிலியில் தரையில் போட்டு அதன் மேல் நடப்பது போன்ற பயிற்சி வழங்கப்பட்டது. ரகு யானைக்கு, இரண்டு கால்களில் நிற்பது மரத்துண்டுகளை இழுத்து வருவது போன்ற பயிற்சியும் வழங்கப்பட்டது.

மசினியானைக்கு தரையில் உட்காருவது, மண்டியிட்டு அமர்வது, படுத்துக் கொண்டே நோட்டமிடுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணா மற்றும் கிரி யானைக்கு, காட்டு யானையைப் பிடித்து பின்புறம் முட்டி தள்ளி லாரியில் ஏற்றுவது போன்ற பயிற்சிகள் மற்றும் ஒரு மரத்துண்டில் நான்கு கால்களையும் அதன் மேல் வைத்து சில நிமிடங்கள் நிற்கும் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த யானைகள், பாகன்களின் பேச்சைக் கேட்டு செல்லத்தனமாக பயிற்சி மேற்கொண்டன.


Next Story

மேலும் செய்திகள்