அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட் - "34,796 வீடுகள் பாதிக்கும்" - நீலகிரியில் பதற்றம்

x

அதிர்ச்சி கொடுத்த ரிப்போர்ட் - "34,796 வீடுகள் பாதிக்கும்" - நீலகிரியில் பதற்றம்

புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழக அரசு திரும்ப பெறக்கோரி, நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் காரணமாக தமிழகத்தில் மனித யானை மோதல் அதிகரித்து வரும் நிலையில், புதிய யானைகள் வழித்தடங்கள் குறித்த வனத்துறை வெளியிட்டது. அதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 80 சதவீத பகுதி, யானைகளின் வழித்தடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். யானைகள் வழித்தட விரிவாக்கத்தால் கூடலூர் அருகே , 34 ஆயிரத்து 796 வீடுகளும், சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே வனத்துறை வெளியிட்ட புதிய யானைகள் வழித்தட அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்