ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்... திணறிய GST ரோடு..திக்குமுக்காடும் செங்கல்பட்டு

x

தென் மாவட்டங்களில் இருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறை, விசேஷ நாட்களையொட்டி மக்கள் பலரும் தென் மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், அனைவரும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பினர். இதனால், சிங்கப்பொருமாள் கோவில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன...


Next Story

மேலும் செய்திகள்