"வி.பி.சிங் மறையலாம், அவர் ஏற்றிய சமூக நீதி தீபம் மறையாது" - "சமூகநீதி காவலருக்கு பிரமாண்ட கவுரவம்"
சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழு உருவச் சிலையை, உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங்கின் குடும்பத்தினருடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்...
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மெரினா கடற்கரை நோக்கி முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது...
52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 600 கிலோ எடையில், 8.5 அடி உயர பீடத்தில், 9.5அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விழாவிற்கு வருகை தந்த வி.பி சிங்கின் குடும்பத்தினரை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின், அவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்... தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு பொன்னாடையும், புத்தகமும் வழங்கப்பட்டன. அதன் பிறகு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், வி.பி.சிங்கின் குடும்பத்தினர் இணைந்து முழு உருவ வெண்கல சிலையைத் திறந்து வைத்தனர்...