"அரசுக்கு நன்றி" - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ்சாலையில் அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் தலைவர் தியாகராஜன், 171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்த அரசுக்கு நன்றி கூறினார். நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Next Story