பள்ளி அறையில் நடந்த சம்பவம்.. கொந்தளித்த பெற்றோர்கள் - தி.மலையில் அதிர்ச்சி

x

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பள்ளி அறையை மாணவிகளை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆரணியில் உள்ள‌ அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகள், அவர்களே மேஜை, பெஞ்சுகளை சீரமைத்து, அறையை துடைப்பத்தால் சுத்தம் செய்தனர். இதுபோன்ற வேலைகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல், மாணவ, மாணவிகளை வேலையில் ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்