2 நல்லாசிரியர் விருது வாங்குனவரு பாக்குற வேலையா இது? - எக்குதப்பாக மாட்டிய ஹெட்மாஸ்டர் சஸ்பெண்ட்

x

ஆலங்குடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த கருப்பையா என்பவர், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நிதி வசூல் செய்தும், பள்ளி முத்திரையை போலியாக பயன்படுத்தி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையா, பல்வேறு முறைகேடு செய்திருப்பது தெரியவந்ததால், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்தார். முறைகேட்டில் ஈடுபட்டட தலைமை ஆசிரியர் கருப்பையா, கடந்த 2010ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதும், அதற்கு முன்பாக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்