வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்... தொடர் போராட்டத்தில் ஊழியர்கள்

x

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் 917 ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால், துறை சார்ந்த ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்