குடும்ப பிரச்னையால் குடித்த விஷம்..விரக்தியில் நோயாளி எடுத்த மற்றொரு முடிவு,மருத்துவமனையில் பரபரப்பு
குடும்ப பிரச்னையால் குடித்த விஷம்
விரக்தியில் நோயாளி எடுத்த மற்றொரு முடிவு
மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை சேர்ந்த ஜெரால்டுக்கும் அவருடைய மனைவி சந்தியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, 2 நாட்களுக்கு முன்பு ஜெரால்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மனவிரக்தியில் இருந்த அவர் திடீரென்று மருத்துவமனையின் 5வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலிசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.