பஸ்ஸில் செல்லும் பயணிகள் கவனத்திற்கு..! - வெளியான முக்கிய தகவல்
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 19ம்தேதி 260 பேருந்துகளும், 20ம் தேதி சனிக்கிழமை 585 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 19 மற்றும் 20ம் தேதிகளில் 45 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோக பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 19ம்தேதி இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல வார இறுதி நாட்களை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 19 மற்றும் 20ம் தேதிகளில் 15 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு, 20ம்தேதி சனிக்கிழமை 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.