இலவச மகளிர் டிக்கெட்டை வைத்து நடந்த மோசடி வேலை...பார்த்த நொடி அதிர்ந்த அதிகாரிகள்
இலவச மகளிர் டிக்கெட்டை வைத்து நடந்த மோசடி வேலை..."இத கொஞ்சம் கூட யோசிக்கல..." பார்த்த நொடி அதிர்ந்த அதிகாரிகள்
திருமண நிகழ்ச்சிக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அரசு பேருந்தில், இலவச மகளிர் டிக்கெட் கொடுத்து பணம் வசூல் செய்திருக்கின்றனர் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும்.... இருவர் மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
தனிநபர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு, அரசு பேருந்துகள் வாடகைக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம்..
போக்குவரத்து கழக பணிமனையில் முறையாக அனுமதி பெற்று பேருந்து வாடகைக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த நடைமுறையில்... பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் நூதன முறையில் கைவரிசை காட்டியிருக்கின்றனர்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டியில் தான் இந்த சம்பவம்...
நத்தம் சாலையில் உள்ள பணிமனையை அணுகிய ஒருவர் திருமண நிகழ்ச்சிக்காக அரசு பேருந்தை வாடகைக்கு கேட்டிருக்கிறார்.
இதன்படி, இரு ஊழியர்களுடன் பேருந்து அனுப்பப்பட, ஆத்தூரில் இருந்து கோபால்பட்டிக்கு, நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களை அவர்கள் ஏற்றிச் சென்றுள்ளனர்.. இதற்குரிய பயணச் செலவை முறையாக டிக்கெட் கொடுத்து வசூல் செய்திருக்கின்றனர்...
இந்நிலையில், மறுபடியும் கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு... நிகழ்ச்சிக்கு வந்தவர்களை இறக்கி விட வந்த பேருந்தை.. டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் மறித்து சோதனை செய்ததில் தான், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.. வரும்போது பேருந்தில் தற்காலிக ஓட்டுநரும், நடத்துநரும் பணியில் இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கின்றனர்... இதுபோன்ற பணிகளுக்கு அவர்கள் பணியில் அமர்த்தப்பட கூடாது என்பது விதி..
இந்நிலையில், பேருந்தில் இருந்த அனைவரின் கையிலும், ஆண்கள் முதற்கொண்டு இலவச மகளிர் பயணத்திற்கான டிக்கெட் இருப்பதை கண்டு அதிகாரிகள் சந்தேகம் கொள்ள, விசாரிக்க தொடங்கியதில் அனைத்தும் அம்பலமாகி இருக்கிறது...
அதாவது, பிக்-அப் அன்டு டிராப் பயணத்தில், பிக் அப்பிற்கு மட்டும் முறையாக டிக்கெட் கொடுத்து பணம் வசூல் செய்து கணக்கு காட்டியிருக்கின்றனர்...
இந்நிலையில், டிராப்பிற்கு கணக்கு காட்டாமல், இலவச டிக்கெட்டை கொடுத்து மோசடி செய்திருப்பது அம்பலமாது..
விசாரணையை கையிலெடுத்த போக்குவரத்து கழக பொது மேலாளர், இந்த சம்பவத்தில் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியில் அமர்த்திய போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் சுப்பையா மற்றும் ஜோசப் நிக்சன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்...
தொடர்ந்து, தற்காலிக ஓட்டுநரும், நடத்துநருமான இருவரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து துறை ரீதியிலான விசாரணையும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது...