வேளாங்கண்ணி பேராலயம் சென்று திரும்பிய ஆளுநர் வேதனை | RN Ravi
நாகை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்ற மாதாவை தரிசித்தார். தொடர்ந்து நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கும், ஜீவா நகரில் பட்டியல் இன மக்களையும் சந்தித்து பேசினார். பின்னர் தமிழ்நாடு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆளுநர் வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய அவர், பொருளாதாரத்தில் தமிழ்நாடு வளர்ந்து கொண்டிருக்கும்போதும், மக்களின் ஏழ்மை நிலையை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது என்றார். நாடு சுதந்திரம் அடைந்தபோது, குறைந்த காலத்தில் ஏழ்மை ஒழிந்து விடும் என அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நினைத்ததாகவும், ஆனால் தற்போது வரை பல பகுதிகளில் மக்கள் ஏழ்மையில் தத்தளித்துக் கொண்டு தான் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். மத்திய அரசு 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாகவும், ஆனால் முறையாக வந்து சேரவில்லை என்பதை பார்த்த இடங்கள் மூலம் தெரிகிறது என்றும் ஆளுநர் கூறினா