"பதக்கங்கள் பெறாத வீரர்களும் நாட்டின் சொத்து"...உணர்ச்சி பொங்க பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி
திருச்சி தேசிய கல்லூரியில் விளையாட்டில் மறுமலர்ச்சி என்ற தலைப்பில், பன்னாட்டு கருத்தரங்கம் கடந்த 7 ஆம் தேதி முதல் தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். குழந்தைகள் விளையாட சென்றால் நேரத்தை வீண்டிப்பதாகவும், படிப்பில் கவனம் செலுத்த முடியாது என்றும் பல பெற்றோர்கள் நினைத்து வருவதாகவும் வேதனை தெரிவித்த ஆளுநர், அது மாற வேண்டும் என்றார். போட்டிகளில் பதக்கங்கள் பெறுபவர்கள் மட்டுமல்ல... பதக்கங்களை பெறாதவர்களும் நம்முடைய நாட்டின் சொத்து என்றும் வலிமை மிகுந்த இளைஞர்கள் நாட்டுக்கு தேவை என்றும் அவர் கூறினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு துறையினர், வீரர்கள் கலந்து கொண்டனர்.
Next Story