"என்னை சந்திக்க வராதீர்கள்..."- ஆளுநருக்கு நோ சொன்ன தியாகி

x

ஆளுநர் தன்னை சந்திப்பதில் விருப்பம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தியாகி பழனிவேல் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நாளை நாகை செல்லவுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். கீழ்வெண்மணி சம்பவத்தின்போது குண்டு பாய்ந்து உயிர்ப்பிழைத்த தியாகி பழனிவேலை சந்திக்க ஆளுநர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தியாகி பழனிவேலை ஆளுநர் சந்திப்பதற்கு நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளுநர் வருகையின்போது கருப்புக் கொடி காட்டுவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதனிடையே, அரசியல் ஆதாயத்திற்காக ஆளுநர் தன்னை சந்திக்க வருவதாக தியாகி பழனிவேல் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்