காந்தி மண்டபத்தில் ஆளுநர் ரவி கண்ட காட்சி... மனம் வருந்தி உடனே செய்த செயல்

x

#GandhiMandapam

காந்தி மண்டபத்தில் ஆளுநர் ரவி கண்ட காட்சி... மனம் வருந்தி உடனே செய்த செயல்

சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்களை கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து காந்தி மண்டபத்தை, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஆளுநர், அங்கிருந்த குப்பை கழிவுகளை அகற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டபத்தில் மதுபாட்டில்களை கண்டது வருத்தத்தை அளித்ததாகவும் இது காந்தியுடைய கொள்கைகளுக்கு எதிரானது எனவும் கூறினார். காந்தி சுதந்திர போராட்ட தியாகி மட்டுமல்ல, அவர் தூய்மையை வலியுறுத்தியதாக ஆளுநர் கூறினார். தூய்மைபடுத்துதலை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, பொது இடங்களில் குப்பை வீசுவது, மாற்றத்திற்கான சமூகத்தின் அறிகுறி அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்