அரசு ஹாஸ்பிடலில் வேலை செய்யாத ஏசி..கடும் விரக்தியில் நோயாளிகள் செய்த செயல் - வெளியான காட்சிகள்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏசி, மின்விசிறி செயல்படாத நிலையில் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். ஏசி வசதி உள்ள வார்டில் பல நாள்களாக ஏசி முறையாக வேலை செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... 12 படுக்கைகள் உள்ள வார்டில் ஒருபுறம் மட்டும் 4 மின்விசிறிகள் உள்ள நிலையில், மற்ற நோயாளிகள் காற்றோட்டம் இல்லமால் அவதியடைந்து வருகின்றனர். நோயாளிகள் தங்கள் சொந்த செலவில் மின்விசிறிகளை வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின் இணைப்புகளும் முறையாக இல்லாததால் திறந்த வெளியில் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்... இதனால் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது...
Next Story