கோவையில் அரசு `ஸ்டார்ட்-அப் திருவிழா' - "சென்னை மேல் முதலீட்டாளர்கள் நம்பிக்கை"
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு Startup திருவிழா இன்று துவங்கி 2 நாட்கள் நடைபெறும் நிலையில், அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், டி.ஆர்.பி ராஜா மற்றும் முத்துச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்... பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார். 450க்கும் மேற்பட்ட அரங்குகள் உடன் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர்கள், மாணவர்கள், புத்தாக்க படைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்... இத்திருவிழாவில் புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதிய படைப்புகளை அறிமுகம் செய்ய உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுகையில், தொழில்களில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
Next Story