"ஐஐடி அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணம்" அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஐஐஎம், ஐஐடி உள்ளிட்ட நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களில் சேரும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற முடிவில் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் அரசு பள்ளி மாணவர்கள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக அரசு பள்ளிகளில் படித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதற்கான சான்றிதழை அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்று வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசு மாதிரி பள்ளிகளில் மட்டும் இப்படி வேறு மாதிரியான முடிவை அரசு எடுத்து இருக்கிறதா என்ற கேள்விகளை முன் வைக்கின்றனர். தமிழக அரசு, விவகாரத்தில் தெளிவான முடிவை எடுக்காத பட்சத்தில், பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளை படித்து, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை மட்டும் அரசு மாதிரி பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிப்பினை இலவசமாக படிக்கக்கூடிய நிலை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்ற கருத்துக்களை கல்வியாளர்கள் முன் வைக்கின்றனர்.