உலகத்தை திரும்பி பார்க்க வைத்த அரசு பள்ளி மாணவன்...நீ, நான் போட்டி போடும் டாப் 10 நிறுவனங்கள்

x

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரில் அரசு பள்ளியில் பயிலும் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன், புதிய செயலியை உருவாக்கிய நிலையில், அமேசான் நிறுவனம் மாதம் இரண்டு லட்ச ரூபாய்க்கு சம்பளத்தில் பணி வழங்கியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்த நல்லபெருமாள் - முத்துலட்சுமி தம்பதியரின் மூத்த மகன் சைலேஷ். இவர் மீஞ்சூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சைலேஷ் அண்மையில் மொபைல் செயலி சிலவற்றை வடிவமைத்துள்ளார். இரண்டு செயலிகள் விளையாட்டு தொடர்பாகவும், மற்றொன்று சமூக வளைதள செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலிகளை உருவாக்கியதால் தனியார் நிறுவனங்கள் தற்போது வரை ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளன. இது தவிர சிறுவனின் திறமையை பாராட்டி அமேசான் நிறுவனம் மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில், செயலியை வடிவமைத்து தர ஒப்பந்தம் செய்துள்ளது. 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே மாதம் 2 லட்ச ரூபாய் ஊதியம் ஈட்டும் மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் மாணவன் சைலேஷை பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்