"ஆளுநருடைய பேச்சு... அன்றோடு போச்சு"- பிரஸ் மீட்டில் நச் பதில் கொடுத்த அமைச்சர்

x

"ஆளுநருடைய பேச்சு... அன்றோடு போச்சு"- பிரஸ் மீட்டில் நச் பதில் கொடுத்த அமைச்சர்

சென்னை காளிகாம்பாள் கோயிலில், வெள்ளித்தேர் திருப்பணியை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இந்து சமய அறநிலையத் துறையில் மகத்தான பணியை திராவிட மாடல் ஆட்சி ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார். ஆளுநர் கருத்துக்களுக்கு பதிலடி கொடுப்பதில் முதல்வர் பின்வாங்க மாட்டார் என்றும், ஆளுநர் பேச்சு... அன்றோடு போச்சு என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்