அட்மிஷனின்றி அல்லாடும் அரசு பள்ளிகள்.. ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே.. அதிர வைக்கும் பல காட்சிகள்

x

வேடசந்தூர் ஒன்றியத்தில் மாணவர் சேர்க்கை இல்லாமல் அரசுப்பள்ளிகள் இயங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியத்தில் 96 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, காலணி, காலை - மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வளவு சலுகை வழங்கப்பட்டாலும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் மிக குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜாக்கவுண்டன்வலசு பள்ளியில் 2 மாணவர்களும், கூத்தாங்கல்பட்டி பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே உள்ளனர். லவுகணம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களே இல்லாமல், தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்து செல்கிறார். இதுபோன்ற அரசு பள்ளிகளால் அரசுக்கு ஏராளமான நிதி இழப்பு ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை, மாணவர்கள் உள்ள பள்ளிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்