ரூ 300 கோடி..! 13 ஆண்டுகள்.. ஒரு ஊரையே ஏமாற்றிய தனியார் நிதி நிறுவனம்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

x

சுமார் 300 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அடமானம் வைத்து ஏமாந்து விட்டதாக, தனியார் நிதி நிறுவனம் மீது குற்றச்சாட்டிய மீனவர்கள், காதுகளில் பூ சுற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் பிரபல தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு, திருப்பாலைக்குடி, தொண்டி, மோர்ப்பண்ணை, தேவிபட்டினம் என சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல மீனவ கிராம மக்கள் சுமார் 300 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தை திருப்பி கொடுத்த பின்னும், நகைகளை திருப்பி தராமல் சுமார் 13 ஆண்டுகளாக நிறுவனத்தார் இழுத்தடித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசில் புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் என கூறிய மீனவ கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர், ராமநாதபுரம் டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, காதுகளில் பூ சுற்றியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் மீனவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை மேலும் கூட்டியது.



Next Story

மேலும் செய்திகள்