"ஓரே பிளான்... கோடீஸ்வர வாழ்க்கை.."8 கிலோ நகையை ஆட்டையை போட்டு முதலாளிக்கு நாமம் போட்ட ஊழியர்கள்..

x

சென்னை சவுகார்பேட்டையில் நகை கடை ஊழியர்கள் 8 கிலோ தங்க நகைகளுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை சவுகார்பேட்டை பெரியநாயக்கன் தெருவில் நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகைக்கடையில் அப்பகுதியில் உள்ள பிற நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளில் இருந்து பழைய நகைகளை பெற்றுக் கொண்டு புதிய நகைகளை வழங்குவது வழக்கம். இந்த கடையில் தீரேந்திரசிங் மற்றும் ஜாகிதர்சிங் ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், ஊழியர்கள் இருவரும் அக்கம்பக்கத்தில் உள்ள நகைகடைகள் மற்றும் பட்டறைகளில் இருந்து 8 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை பெற்று கொண்டு தாங்கள் பணியாற்றும் கடையில் கொடுக்காமல் தப்பியோடிவிட்டனர். இதனடிப்படையில் இருவர் மீதும் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 5 புள்ளி 6 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்