போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த பொற்கொல்லர்.. மதுரை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு

x

சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த பொற்கொல்லரின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு சார்பில் 18 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் சுப்பிரமணியன் என்பவரது மனைவி சாந்தி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2017ம் ஆண்டு, தனது கணவர் மற்றும் மகனை போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும், போலீஸ் தாக்கியதில் தனது கணவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தனது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணியன் உயிரிழப்புக்கு போலீசார் எந்த வகையிலும் காரணமாக முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழக அரசு 18 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்