பிரபல கோல்டு லோன் நிறுவனத்தின் மோசடி வேலை.. தந்தி டிவி செய்தி எதிரொலியால் புன்னகைக்கும் மக்கள்
மோசடியில் காணாமல் போன தங்க நகை, தந்தி டிவி செய்தி எதிரொலியால் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மணப்புரம் கோல்ட் லோன் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2022 ஆண்டு மணப்புரம் ஷேர் scheme மூலம் ஒரு சவரன் நகைக்கு, 2 ஆயிரம் ரூபாய் மாதம் தோறும் பங்குத்தொகை கிடைக்கும் என மணப்புரம் நிர்வாகத்தில் உள்ளவர்கள் வீடு வீடாக சென்று நகை பெற்று உள்ளனர். 120 வாடிக்கையாளர்கள் இதை நம்பி, சுமார் ஆயிரத்து 22 சவரனுக்கு மேல் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
2022ல் ஒரு பவுனுக்கு மாதம் தோறும் 2 ஆயிரம் கொடுத்த நிர்வாகம், இரண்டாம் ஆண்டான 2023 ல் 500-க்கு கூடுதலாக, சேர்த்து மாதம் தோறும் 2500 ரூபாய் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களாக, பங்குத்தொகை வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கிற்கு வரத நிலையில், இது வழக்காக மாறி பேசுபொருளானது. இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில், நகைக்கு உரிய ஆதாரத்தை கொண்டு வந்த பொதுமக்களிடம், அந்த நிறுவனம் நகைகளை ஒப்படைத்து வருகிறது. தற்போது வரை 600 சவரன் நகை பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளுக்கு உரிய ஆதாரம் கொடுத்த பின்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் தெரிவித்துள்ளனர்.