பேஸ்டாக மாறிய தங்கம்... வித்தை காட்டிய பயணியால் ஏர்போர்ட்டில் பரபரப்பு
திருச்சி விமான நிலையத்தில், 432 கிராம் எடையுள்ள தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி உடலில் மறைத்து வைத்து கடத்த முயன்ற பயணியை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். ஏர் இந்தியா விமானம் மூலம் சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்த போது சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 432 கிராம் எடையுள்ள சுமார் 27 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பயணியிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், கடத்தலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story